Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில் நிலம் வாங்கித் தருவதாக ரூ.34 லட்சம் மோசடி: ஒருவர் கைது போலீசார் அதிரடி

குமரியில் நிலம் வாங்கித் தருவதாக ரூ.34 லட்சம் மோசடி: ஒருவர் கைது போலீசார் அதிரடி

0
நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்த நபர் கைது
நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் பெற்றதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணிய பிள்ளை மகன் காந்தி (43). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் நாகர்கோவில், கட்டையன்விளை பகுதியில் சுமார் 11 சென்ட் காலிமனையை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி, G-Pay மற்றும் RTGS மூலம் ரூ.34 லட்சம் பெற்றுள்ளார்.

பின்னர், நிலத்தை பதிவு செய்து தராமல் காலம் தாழ்த்தியதுடன், பணத்தைத் திருப்பிக் கேட்டபோதும் பல்வேறு காரணங்களைக் கூறி பணத்தைத் திருப்பித் தராமல், புகார்தாரரை விரட்டி உள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. அன்ஷுல் நாகர், IPS* அவர்கள், குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சாம் சுந்தர் அவர்கள் தலைமையிலான போலீசார், குற்ற எண் 32/2026, BNS பிரிவுகள் 316(2), 318(4), 319(1), 319(2), 340(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளி காந்தியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version