மேஜிக் நிகழ்த்துவாரா மெஸ்ஸி? – இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை | FIFA WC 2026

0
23

பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் இறுதிக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. அமெரிக்​கா​வின் அட்லாண்டாவில் உள்ள மெர்​சிடீஸ் பென்ஸ் மைதானத்​தில் நாளை அதி​காலை 12.30 மணிக்கு நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான அர்ஜெண்டினா, இங்கிலாந்து அணி​யுடன் பலப்பரீட்சை நடத்​துகிறது.

நடப்பு சாம்​பிய​னான அர்​ஜெண்​டினா தனது ஆதிக்​கத்​தைத் தொடரும் நோக்​கில் களமிறங்​கு​கிறது. மறு​புறம், 1966-ம் ஆண்​டுக்கு பிறகு உலகக் கோப்​பையை வெல்​லும் கனவுடன் காத்​திருக்​கும் இங்​கிலாந்து அணி இம்​முறை அந்த வாய்ப்பை நனவாக்​கும் உறு​தி​யுடன் அரை இறு​திக்​குள் நுழைந்​துள்​ளது.

அர்ஜெண்டினா கால் இறுதி சுற்​றில் சுவிட்​சர்​லாந்​துக்கு எதி​ராக 3-1 என்ற கோல் கணக்​கில் பெற்ற வெற்​றி, அந்த அணி​யின் தன்​னம்​பிக்​கையை மேலும் உயர்த்​தி​யுள்​ளது. இங்​கிலாந்து அணி​யானது நார்​வேக்கு எதி​ரான கால் இறுதி ஆட்​டத்​தில் ஒழுங்​கான அணிசேர்க்​கை​யுடன் கட்​டுப்​பா​டான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தி​யது. அரை இறுதி ஆட்​டத்​தில் அனை​வரது கவன​மும் அர்​ஜெண்​டினா கேப்​டன் லயோனல் மெஸ்ஸி மீது இருக்​கக்​கூடும். 39 வயதி​லும் அணி​யின் தாக்​குதல் ஆட்​டத்தை வழிநடத்தி வரும் மெஸ்​ஸி, தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் மேலும் ஒரு வரலாற்​றுச் சாதனையைப் படைக்க விரும்​பு​கிறார்.

அவருக்கு துணை​யாக ஜூலியன் ஆல்​வரஸ், என்சோ பெர்​னாண்​டஸ், அலெக்​சிஸ் மெக் அலிஸ்​டர் ஆகியோர் சிறப்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர். நடப்பு தொடரில் 8 கோல்​களை அடித்​துள்ள மெஸ்​ஸி, 2 கோல்​கள் அடிக்க உதவி உள்​ளார். லீக் சுற்று மற்​றும் நாக் அவுட் சுற்​று, ரவுண்ட் ஆஃப் 16 சுற்று ஆகிய​வற்​றில் கோல் அடித்து அசத்​திய மெஸ்​ஸி, கால் இறுதி சுற்​றில் கோல் அடிக்​கத் தவறி​னார். தனது கோல் வேட்​டையை இங்​கிலாந்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் தொடரச் செய்​வ​தில் லயோனல் மெஸ்ஸி தீவிரம் காட்​டக்​கூடும்.

இங்​கிலாந்து தரப்​பில் ஜூட் பெல்​லிங்​ஹாம், ஹாரி கேன், புக்​காயோ சாகா மற்​றும் டெக்​லன் ரைஸ் ஆகியோரின் செயல்​பாடு முக்​கிய​மான​தாக இருக்​கும். குறிப்​பாக பெல்​லிங்​ஹாமின் மிட்ஃபீல்டு ஆட்​ட​மும், ஹாரி கேனின் கோல் அடிக்​கும் திறனும் இங்​கிலாந்​தின் நம்​பிக்​கை​யாக பார்க்​கப்​படுகின்​றன.

நட்​சத்​திர வீரர்​கள் அர்ஜெண்டினா

லயோனல் மெஸ்ஸி

ஜூலியன் ஆல்​வரஸ்

என்சோ பெர்​னாண்​டஸ்

லிசாண்ட்ரோ மார்​டினஸ்

அரை இறு​தி​யில் நுழைந்த விதம்

அர்​ஜெண்​டினா 3–0 அல்​ஜீரியா

அர்​ஜெண்​டினா 2–0 ஆஸ்​திரியா

அர்​ஜெண்​டினா 3–1 ஜோர்​டான்

அர்​ஜெண்​டினா 3–2 கேப் வெர்டே

அர்​ஜெண்​டினா 3–2 எகிப்து

அர்​ஜெண்​டினா 3–1 சுவிட்​சர்​லாந்து

அரை இறு​தி​யில் நுழைந்த விதம்

இங்​கிலாந்து 4–2 குரோஷியா

இங்​கிலாந்து 0–0 கானா

இங்​கிலாந்து 2–0 பனாமா

இங்​கிலாந்து 2–1 காங்கோ

இங்​கிலாந்து 3–2 மெக்​சிகோ

இங்​கிலாந்து 2–1 நார்வே

நட்​சத்​திர வீரர்​கள் இங்​கிலாந்து

ஜூட் பெல்​லிங்​ஹாம்

ஹாரி கேன்

புக்​காயோ சாகா

டெக்​லன் ரைஸ்

விளை​யாடும் பாணி எப்​படி?

அர்​ஜெண்​டினா பயிற்​சி​யாளர் லியோனல் ஸ்கலோனி பந்​தைக் கட்​டுப்​பாட்​டில் வைத்து தாக்​குதலை உரு​வாக்​கும் பாணியை கடைப்​பிடிக்​கிறார். அதே​நேரத்​தில், தாமஸ் டூகல் தலை​மையி​லான இங்​கிலாந்து ஒழுங்​கான பாது​காப்​பு, அதிவேக எதிர்​தாக்​குதல் மற்​றும் செட்​-பீஸ் வாய்ப்​பு​களை நம்பி விளை​யாடு​வதை வாடிக்​கை​யாக கொண்​டுள்​ளது.

‘‘கடவுளின் கை’’

அர்ஜெண்டினா – இங்கிலாந்து அணிகள் மோதல் என்றாலே உலகக் கோப்பை வரலாற்றில் பல மறக்க முடியாத தருணங்கள் உள்ளன. 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டியாகோ மரடோனாவின் “கடவுளின் கை” கோலும், அதனைத் தொடர்ந்து அவர் அடித்த “நூற்றாண்டின் கோல்” எனப் போற்றப்படும் கோலும் இரு அணிகள் இடையிலான மோதலை உலகக் கால்பந்தின் மிகப்பெரிய ‘பகையாக’ மாற்றின. இதற்கு 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டேவிட் பெக்காம் அடித்த பெனால்டி கோலால் இங்கிலாந்து பழி தீர்த்ததும் இந்த மோதலின் முக்கிய அத்தியாயமாகும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here