Home மாநில செய்திகள் திமுக ஆட்சியில் நடந்த அறநிலையத் துறை ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை: அமைச்சர் ரமேஷ் தகவல்

திமுக ஆட்சியில் நடந்த அறநிலையத் துறை ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை: அமைச்சர் ரமேஷ் தகவல்

0

கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலை​யத் துறை​யில் நடை​பெற்ற ஊழல்​கள் தொடர்​பாக வெள்ளை அறிக்கை வெளி​யிடு​வது குறித்து ஆலோ​சனை நடத்​தப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் ரமேஷ் தெரி​வித்​தார்.

சுதந்​திர போராட்ட வீரர் தீரன் சின்​னமலை​யின் 221-வது நினைவு நாளை முன்​னிட்​டு, திருச்சியில் அவரது சிலைக்கு நேற்று அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷ், சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் ரவிசங்​கர் ஆகியோர் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர்.

அப்​போது அமைச்​சர் ரமேஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: முதல்​வர் விஜய் தனித்து விடப்​பட்​டிருப்​ப​தாக திமுக தலை​வர் ஸ்டா​லின் கூறி​யுள்​ளார். ஆனால், சட்​டப்​பேர​வை​யில் பேசிக் கொண்​டிருந்த ஸ்டா​லின்தான், இன்று சட்​டப்​பேரவை நிகழ்​வு​களை வீட்​டில் இருந்து பார்க்​கக்​கூடிய நிலை​மைக்கு தனித்து விடப்​பட்​டிருக்​கிறார்.

ஸ்ரீரங்​கம் கோயிலுக்கு வந்த ஆந்​திர பெண்​ணிடம் ரூ.2 ஆயிரம் லஞ்​சம் பெற்​ற​தாக எழுந்த புகார் தொடர்​பாக விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. அனைத்து கோயில்​களி​லும் ஒரு சில​ரால் இது​போன்று நடக்​கிறது. இதுகுறித்து விசா​ரித்து உரிய நடவடிக்கை எடுக்​கப்படும். காவிரி, கொள்ளிடத்​தில் தடுப்​பணை​கள் கட்டுவது தொடர்​பாக சம்​பந்​தப்​பட்டதுறை அமைச்​சர் ஆய்வு நடத்தி வரு​கிறார். நிதி​நிலையை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்​படும்.

முன்​னாள் அ மைச்​சர் செந்​தில் பாலாஜி ஓடி ஒளிய​வில்லை என்​றால், இத்​தனை நாள் எங்​கிருந்​தார், நீதி​மன்ற நடை​முறை​களை தைரிய​மாக பின்​பற்றி இருக்க வேண்​டியது​தானே? கடந்த திமுக ஆட்​சி​யில் இந்து சமய அறநிலை​யத் துறை​யில் நடை​பெற்ற ஊழல்​கள் தொடர்​பாக வெள்ளை அறிக்கை வெளி​யிடு​வது குறித்து ஆலோ​சனை நடத்தி வரு​கிறோம்.

எந்​தெந்த கோயில் சொத்​துகள் கொள்​ளை​யடிக்​கப்​பட்​டிருக்​கின்​றன, என்ன தவறுகள் நடந்​திருக்​கின்​றன, யார் யாருக்கு இதில் தொடர்பு இருக்​கிறது என ஆய்வு செய்து வரு​கிறோம். கோயில் சொத்​துகளை பாது​காக்​க​வும், முறை​கேடு​களை கண்​டு​பிடிக்​க​வும் குழுக்​கள் அமைக்​கப்​படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version