Home மாநில செய்திகள் தமிழகம் இதுவரை கண்டிராத மோசமான அரசு: தவெக ஆட்சி குறித்து உதயநிதி விமர்சனம்

தமிழகம் இதுவரை கண்டிராத மோசமான அரசு: தவெக ஆட்சி குறித்து உதயநிதி விமர்சனம்

0

இந்​தளவுக்கு மோச​மான அரசை தமிழகம் இது​வரை கண்​ட​தில்லை என தஞ்​சாவூரில் நடந்த திமுக ஆர்ப்​பாட்​டத்​தில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி விமர்​சித்​துள்​ளார்.

மேகே​தாட்​டு​வில் கர்​நாடக அரசு அணை கட்​டும் முயற்சியை தடுக்க நடவடிக்கை எடுக்​காத தவெக அரசை கண்​டித்​தும், கூட்​டுறவு வங்​கி​களில் பயிர்க் கடனை முழு​மை​யாக தள்​ளு​படி செய்​து, டெல்டா மாவட்​டங்​களை வறட்சி பாதித்த மாவட்​டங்​களாக அறிவிக்க வலி​யுறுத்​தி​யும் திமுக சார்​பில் தஞ்​சாவூரில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

முன்​னாள் அமைச்​சரும், திமுக முதன்​மைச் செய​லா​ள​ரு​மான கே.என்​.நேரு வரவேற்​றார்.இதில், எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி பேசி​ய​தாவது: காவிரி மேலாண்மை வாரிய உத்​தர​வின்​படி தமிழகத்​துக்கு கிடைக்க வேண்​டிய உரிய தண்​ணீரைப் பெற தமிழக அரசு தவறி​விட்​டது. விவ​சா​யிகளின் கண்​ணீரைப் பற்றி கவலைப்​ப​டா​மல், தவெக அமைச்​சர்​கள் திரைப்​படத்தை பார்த்து கண்​ணீர் விடு​கின்​றனர்.

காவிரிப் பிரச்​சினையை தமிழகமே தீவிர​மாக பேசிக் கொண்​டிருக்க, முதல்​வர் விஜய் ஆய்வு என்​கிற பெயரில் ரீல்ஸ் எடுத்​துக்கொண்​டிருக்​கிறார். முதல்​வர், அமைச்​சர்​கள், எம்​எல்​ஏக்​கள் ரீல்ஸ் மோகத்தில் உள்ளனர். இது​போன்ற மோச​மான அரசை, தமிழகம் இது​வரை கண்​ட​தில்​லை. முதல்​வர், நீர்​வளத் துறை அமைச்​சர் செய்​தி​யாளர்களை சந்திக்க மறுக்கின்றனர்.

வேளாண்மை துறை அமைச்​சர் பட்​ஜெட் நகலை எடுத்​துக் கொண்டு திருப்​ப​திக்கு செல்​கிறார். இது​தான் இந்த அரசின் லட்​சணம். மொத்த அமைச்​சர​வை​யும் ஜோக்​கர் கூட்​ட​மாக உள்​ளது. மேட்​டூர் அணை திறக்கப்படாதது பற்​றிய கவலைவிஜய்க்கு இல்​லை.

குறுவை சாகுபடி பொய்த்​த​தால் சுமார் 14 லட்​சம் விவ​சா​யிகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். எனவே, டெல்டா மாவட்​டங்​களை வறட்சி பாதித்த பகு​தி​களாக அறி​வித்​து, பாதிக்​கப்​பட்ட விவ​சா​யிகளுக்கு ஏக்​கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்​டும்.

விவ​சாயக் கடன்​களை முழு​மை​யாகத் தள்​ளு​படி செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.ஆர்ப்​பாட்​டத்​தில், மமக பொதுச் செய​லாளர் ஜவாஹிருல்​லா, மஜக தலை​வர் தமீ​முன் அன்​சாரி, முன்​னாள் அமைச்​சர்​கள், எம்​.பி.க்​கள், எம்​எல்​ஏக்​கள், விவ​சா​யிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version