Home மாநில செய்திகள் கே.என்.நேருவின் மேல்​முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

கே.என்.நேருவின் மேல்​முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

0

நக​ராட்சி துறை அதி​காரி​கள் நியமனத்​தில் முறைகேடு நடை​பெற்​றதாக திமுக முன்​னாள் அமைச்​சர் கே.என். நேரு​வுக்கு எதிராக வழக்கு பதிய சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை எதிர்த்து தொடரப்​பட்ட மேல்​முறையீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில், 2,538 உதவி பொறி​யாளர்​கள் மற்​றும் இளநிலை பொறி​யாளர்​கள் உள்​ளிட்ட அதி​காரி​கள் நியமனத்​துக்கு 634 கோடி ரூபாய் லஞ்​சம் பெறப்​பட்​டுள்​ள​தாகவும், இது சம்​பந்​த​மாக வழக்​குப் பதிவு செய்​யும்​படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்​கத் துறை கடிதம் அனுப்​பி​யிருந்​தது.

அந்​தக் கடிதத்​தின் அடிப்​படை​யில் தமிழக லஞ்ச ஒழிப்​புத்​துறை வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம் கே.என்.நேரு​வுக்கு எதிராக வழக்கு பதிய உத்​தர​விட்​டிருந்​தது.

இதையடுத்து, வழக்​குப் பதிய லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு பிறப்​பித்த உத்​தரவை மறு ஆய்வு செய்​யக்​கோரி கே.என்.நேரு சென்னை உயர்​நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு தள்​ளு​படி செய்​யப்​பட்​டது.

அந்த உத்​தரவை எதிர்த்து முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீட்டு மனு தாக்​கல் செய்​திருந்​தார். அந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் திபாங்​கர் தத்தா, ஷீல் நாகு ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது கே.என். நேரு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் ஷியாம் திவான் மற்​றும் சித்​தார்த் லூத்ரா ஆகியோர் ஆஜராகி, இந்​தப் புகாரை அளித்​தவர் அரசி​யல் எதிரி என்​றும், தனக்கு எதிராகத் தொடரப்​பட்​டுள்ள வழக்கு அரசி​யல் பழிவாங்​கும் நோக்​கம் கொண்​டது என்​றும் குற்​றச்​சாட்​டுகளுக்கு விளக்​கம் அளிக்​கவோ, தமது தரப்பு நியாயங்​களை முன்​வைக்​கவோ உரிய வாய்ப்பு வழங்​கப்​பட​வில்லை என்​றும் வாதிட்​டனர்.

அதுபோல, அமைச்​சராக இருந்த ஒரு​வரை​யும், அவரது சகோ​தரர்​கள் மற்​றும் நெருங்​கிய வட்​டாரத்​தில் இருப்​பவர்​களை​யும் விசா​ரணை​யின் தொடக்​கத்​திலேயே சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் அணுகி சென்னை உயர் நீதி​மன்​றம் கருத்​துகளைத் தெரி​வித்​திருப்​பது முறையற்​றது என்​றும் கூறினர்.

அதற்கு நீதிப​தி​கள், அமைச்​சராகப் பொறுப்பு வகித்த ஒரு​வர் மீது இத்​தகைய குற்​றச்​சாட்டு எழுந்​துள்ள நிலை​யில், முன்​னரே ஏன் உடனடி​யாக உச்ச நீதி​மன்​றத்தை அணுக​வில்லை என்று கேள்வி எழுப்​பினர். மேலும், தற்​போது உச்​சநீதி​மன்​றத்​தில் முன்​வைக்​கப்​படும் பல வாதங்​களை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஏன் முன்​வைக்​க​வில்லை என்​றும், அங்கு இந்த வாதங்​களை முன்​வைக்க அனுமதிக்​க​வில்லை என்​ப​தற்​கான விவரங்​களைத் தெரி​விக்​குமாறு கூறினர்.

அதற்கு கே.என்.நேரு தரப்பு வழக்​கறிஞர்​கள், தங்​களது தரப்பு விரிவான வாதங்​களை முன்​வைக்​கவே சென்னை உயர் நீதி​மன்​றம் அனுமதிக்​க​வில்லை என மீண்​டும் குற்​றம்​சாட்​டினர்.

ஆனால், அந்த வாதங்​களை ஏற்​றுக்​கொள்ள மறுத்த நீதிப​தி​கள், சம்​பந்​தப்​பட்ட நபர் முக்​கிய​மான அமைச்​சகத்​திற்​குப் பொறுப்பு வகித்​தவர் என்​ப​தால், இந்த விவகாரத்​தின் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் யார் என்​ப​தைக் கண்​டறிவது மிகவும் அவ​சி​யம் என்​றும், அதற்​காகவே வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்த வேண்​டியுள்​ள​தாகவும் தெரி​வித்​தனர்.

மேலும், சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்த பின்​னர் உடனடி​யாக உச்​சநீதி​மன்​றத்தை அணுகாமல், உயர் நீதி​மன்​றத்​தில் சீராய்வு மனு தாக்​கல் செய்​துள்​ளீர்​கள், அந்த சீராய்வு மனுவும் தள்​ளு​படி செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், முக்​கிய​மான ஆவணங்​களின் அடிப்​படை​யில்​தான் உயர் நீதி​மன்​றம் முடிவெடுத்​திருக்க வேண்​டும் என சுட்​டிக்​காட்​டினர்.

எனவே, தற்​போதைய நிலை​யில் இந்த விவகாரத்​தில் தலை​யிட்டு வேறு எந்த உத்​தரவையும் பிறப்​பிக்க முடி​யாது எனத் தெரி​வித்த நீதிப​தி​கள், கே.என்.நேரு​வின் மனுவைத் தள்​ளு​படி செய்து உத்​தரவிட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version