ரஜினிகாந்தை இயக்கும் தெலுங்கு டைரக்டர்?

0
315

நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்துள்ளார். இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக.14-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இப்போது ‘ஜெயிலர் 2’ படத்தில், அவர் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் நானி நடித்த ‘சூர்யாவின் சனிக்கிழமை’படத்தை இயக்கியவர். இதைஅஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தயாரித்த மைத்ரி
மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here