காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள் எவை? @ FIFA WC 2026

0
113

நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள் குறித்து பார்ப்போம்.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 48 அணிகள் பங்கேற்று முதல் சுற்றான குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின.

ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என மொத்தம் 12 பிரிவுகளாக இந்த சுற்று நடைபெற்றது. இதில் பிரிவு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடித்த சிறந்த 8 அணிகளும் நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’-க்கு முன்னேறின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த சுற்றில் நெதர்லாந்து, ஜெர்மனி, குரோஷியா உட்பட 16 அணிகள் வெளியேறின. தொடர்ந்து ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது.

இதில் கனடா, பராகுவே, அமெரிக்கா, பிரேசில், போர்ச்சுகல், மெக்சிகோ, கொலம்பியா, எகிப்து உள்ளிட்ட அணிகள் வெளியேறின.

இந்த தொடரை நடத்தும் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா என எந்தவொரு அணியும் காலிறுதிக்கு முன்னேறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பிரான்ஸ், மொராக்கோ, ஸ்பெயின், பெல்ஜியம், நார்வே, இங்கிலாந்து, அர்ஜெண்டினா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

காலிறுதி ஆட்டங்களின் விவரம்:

>> பிரான்ஸ் vs மொராக்கோ – ஜூலை 10 – அதிகாலை 1.30

>> ஸ்பெயின் vs பெல்ஜியம் – ஜூலை 11 – அதிகாலை 12.30

>> நார்வே vs இங்கிலாந்து – ஜூலை 12 – அதிகாலை 2.30

>> அர்ஜெண்டினா vs சுவிட்சர்லாந்து – ஜூலை 12 – காலை 6.30

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here