
வாவறை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் 22வது ஆண்டு விழா மார்க்சிஸ்ட் நிர்வாகி செல்லசாமியால் துவக்கி வைக்கப்பட்டது. விழாவில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாநில ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற ஜோஸ்னா, மாநில அளவில் 3000 மீட்டர் ஓட்டப் போட்டியில் 3ம் இடம் பெற்ற ராக்கின், மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் இடம்பெற்ற அஸ்வின் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.













