விரிவிளை: கோயில் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

0
199

நித்திரவிளை அருகே விரிவிளை என்ற இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இருந்தது. இந்த கடை மேற்கு கடற்கரை சாலையில் இருந்ததால் நீதிமன்ற உத்தரன்படி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ( 2017-ல்)  மூடப்பட்டது. இந்த டாஸ்மாக் கடை இருந்த பகுதியிலிருந்து பத்து மீட்டர் தொலைவில் ஜெகதாம்பிகை கோயில் ஒன்று உள்ளது. டாஸ்மாக் கடை மூடுவதற்கு முன் கோயில் திருவிழாக்காரர்களின் பக்தர்களுக்கு குடிமகன்கள் தொல்லை  இருந்ததால் பக்தர்கள் இருந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து வந்தனர்.  

       இந்த நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை இருந்த பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து கோயில் வரும் பக்தர்கள், பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

       இது சம்பந்தமாக விரி விளை,   காஞ்சாம் புறம், சரல் முக்கு உட்பட பகுதிகளில் ஊர் பொதுமக்கள் சார்பில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here