Home தேசிய செய்திகள் மேகாலயாவில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு

மேகாலயாவில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு

0

மேகாலயாவில், ‘கேரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்’ தேர்தல் ஏப்ரல் 10-ல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. வேட்பு மனுவுடன் பழங்குடியினத்தவர் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதை கேரோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றன. ஆனால், பழங்குடியினர் அல்லாத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர்.

இந்நிலையில், துரா பகுதியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தை நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். கலவரம் வெடித்ததால் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், தடையை மீறி ஏராளமானோர் இரவு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீஸார் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version