விளவங்கோடு, கடையால் பகுதியில் பால்ராஜ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏல சீட்டு பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் பணத்தை திரும்ப பெற உதவி கேட்டு, கடையால் நகர காங்கிரஸ் தலைவர் சத்யராஜ் தலைமையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உட்பட பலர் தாரகை கத்பட் எம்எல்ஏ இடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பணத்தை பெறுவதற்கான முயற்சிகள் நடத்தப்படும் என எம்எல்ஏ கூறினார். சுமார் 12 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதும், 92 பேர் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும் தெரிய வருகிறது.














