விளவங்கோடு, தோட்டத்துமடம் நவநீத கிருஷ்ண சுவாமி கண்டேஷ்வரர் பத்ரகாளியம்மன் கோயிலில் 683ஆம் ஆண்டு பஜனை பட்டாபிஷேகம் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான நடன போட்டியை பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே 10,000 ரூபாய், 7,500 ரூபாய், 5,000 ரூபாய் ரொக்கப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.














