விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி தலைமையில் அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட வாகனத்தை துரத்தி சென்று திக்குறிச்சி பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்து சோதனை செய்தபோது, அதில் 600 லிட்டர் படகுகளுக்கு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட மண்ணெண்ணெய் இனயம் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது. வாகனம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.














