Home கன்னியாகுமரி செய்திகள் விளவங்கோடு: 2 வாகனங்களில் 3 ஆயிரம் ரேஷன் அரிசி பறிமுதல்

விளவங்கோடு: 2 வாகனங்களில் 3 ஆயிரம் ரேஷன் அரிசி பறிமுதல்

0

குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் K M. பாரதி தலைமையிலான குழுவினர், 20-ம் தேதி விளவங்கோடு வட்ட பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். காரோடு என்ற இடத்தில் சொகுசு காரை 37 கி.மீ. துரத்திச் சென்று, கேரளாவில் உள்ள முக்காலா என்ற இடத்தில் மடக்கி சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் மாங்கோடு பகுதியிலும் சுமார் 1000 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version