நாகர்கோவில்: தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்., – எம்.எல்.ஏ., மீது, திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
கேரள சி.எஸ்.ஐ., சபைக்கு சொந்தமான தெற்கு கேரள மகா திருச்சபை தலைமையகம், திருவனந்தபுரம் அருகே பாளையம் பகுதியில் உள்ளது. இங்கு கி றிஸ்துவ சர்ச்சும் உள்ளது. கடந்த 2022 ஏப்., 29ல் ஒரு தரப்பு பங்கு மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, முன்னாள் பிஷப் தர்மராஜ் ரசாலம், தற்போதைய விளவங்கோடு காங்., -எம்.எல்.ஏ., பிரவீன், அவரது ஆதரவாளர்கள் சர்ச் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, வன்முறையில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அதன் மீது, போலீசார் எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், முன்னாள் பிஷப் தர்மராஜ் ரசாலம், அப்போதைய செயலரும் தற்போதைய காங்., – எம்.எல்.ஏ.,வுமான பிரவீன், நிபு ஜேக்கப், வர்க்கி, ரசலையன், சதீஷ்குமார் உட்பட, 16 பேர் மீது, திருவனந்தபுரம் மியூசியம் போலீசார், வழக்கு பதிந்தனர்.
