குமரி மாவட்டத்தில் 79 கடலோர குடியிருப்புகள், 19 வழியோர ஊரக குடியிருப்புகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிக்காக 5500 மீட்டர் நீளத்திற்கு 400மி. மீ விட்டமுள்ள OPVC குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கிறது. கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட மாங்குழி சாலையில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை 30. 05. 2026-க்குள் விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறித்தினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
