உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மே 9 முதல் மே 13 வரை நடைபெற்ற அகில இந்திய காவல்துறையின் தேசிய பேட்மிண்டன் தொடர்-2026 போட்டியில், கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை பெண் தலைமை காவலர் ஜீவா 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தேசிய அளவில் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
