Home மாநில செய்திகள் சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெக வழக்கறிஞர் அணியை பலப்படுத்த விஜய் திட்டம்

சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெக வழக்கறிஞர் அணியை பலப்படுத்த விஜய் திட்டம்

0

​தி​முக, அதி​முக​வுக்கு இணை​யாக தவெகவின் வழக்​கறிஞர் அணியை பலப்​படுத்த விஜய் தீவிர நடவடிக்கை எடுத்து வரு​கிறார். தமிழகத்​தில் மாறி மாறி ஆட்​சிக்கு வந்த திமுக, அதி​முக​வுக்கு பெரும் பலமாக இருப்​பது வழக்​கறிஞர் அணி​கள்.

தேர்​தல் நேரத்​தில் வேட்​புமனு உள்​ளிட்ட ஆவணங்​களை முறை​யாக தயாரித்​துக் கொடுத்​தல், கட்சி அளவிலும், அரசுக்கு ஆதர​வான, எதி​ரான வழக்​கு​களில் உள்​ளூர் நீதி​மன்​றம் முதல் உச்ச நீதி​மன்​றம் வரை சென்று வாதிட்டு வெற்​றியைத் தேடித் தருதல், எம்​.பி. எம்​எல்​ஏக்​கள், உள்​ளாட்​சிப் பிர​தி​நி​தி​கள் தேர்வு வரை சட்ட ரீதி​யான அனைத்து விவ​காரங்​களி​லும் வழக்​கறிஞர் அணி​யின் பங்கு முக்​கிய​மானது.

பொது​வாக, ஆளுங்​கட்​சி​யின் வழக்​கறிஞர் அணி​யில் இருந்து திறமை​யான, நன்கு பரிச்​சய​மான, கைதேர்ந்த வழக்​கறிஞர்​களே உச்ச நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றம் மற்​றும் மாவட்ட நீதி​மன்​றங்​களுக்கு அரசு வழக்​கறிஞர்​களாக ஆளுங்​கட்சி சார்​பில் நியமிக்​கப்​படு​வார்​கள்.

குறிப்​பாக, உயர் நீதி​மன்​றத்​தில் அரசு தலைமை வழக்​கறிஞ​ராக நியமிக்​கப்​படு​பவர்​தான் அரசி​யலமைப்​புச் சட்ட ரீதி​யாக அரசுக்​கும், நீதித் துறைக்​கும் இடையே ஒருங்​கிணைப்பு பால​மாக செயல்​படும் மாநில அரசின் உயர் பதவி வகிக்​கும் சட்ட அதி​காரி ஆவார்.

அவரது தலை​மை​யின்​கீழ் உரிமை​யியல், குற்​ற​வியல் வழக்​கு​களைக் கையாளும் வகை​யில் அமை​யும் 100-க்​கும் மேற்​பட்ட அரசு வழக்​கறிஞர்​கள் குழு, ஆட்​சி​யாளர்​களுக்கு பக்​கபல​மாக செயல்​படும்.

புதிய கட்​சி​யான தவெக​வில் திமுக, அதி​முக அளவுக்கு பலமான வழக்​கறிஞர் அணி இல்​லை. இதனால், முதல் வேலை​யாக கட்​சி​யின் வழக்​கறிஞர் அணியை பலப்​படுத்த விஜய் திட்​ட​மிட்​டுள்​ளார்.

ஒரு​வேளை, தொங்கு சட்​டப்​பேரவை அமைந்​தா​லும், சட்ட ரீதியி​லான அடுத்​தகட்ட நகர்​வு​களுக்கு கைதேர்ந்த சட்ட நிபுணர்​களின் ஆலோ​சனை தேவை என்​பதை உணர்ந்​துள்ள அவர், தமிழகம் முழு​வதும் உள்ள தவெக வழக்​கறிஞர் அணியை தனது நேரடி கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வந்​துள்​ளார்.

பல்​வேறு கட்​சிகளில் பொறுப்பு வகித்த மூத்த வழக்​கறிஞர்​கள் பலரும், தேர்​தல் வெற்​றிக்கு முன்பே தவெக​வில் இணைவதற்கு காய் நகர்த்​தினர். அவர்​களில் திறமை​யானவர்​களை அடை​யாளம் கண்​டு, கட்​சிக்​குள் இணைத்​துக் கொள்ள விஜய் ஒப்​புதல் அளித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

தவெக வழக்​கறிஞர் அணி​யில் இணைந்​தால், அரசு வழக்​கறிஞர்​ பதவி கிடைக்​கும்​ என்​ற எண்​ணத்​தில்​ ​மாற்​றுக்​ கட்​சிகளைச்​ சேர்​ந்​த பெண்​ வழக்​கறிஞர்​கள்​ பலரும்​ தற்​போது தவெக​வில்​ இணை​ய அதி​க ஆர்​வம்​ ​காட்​டி வருகின்​றனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version