Home மாநில செய்திகள் கன்னியாகுமரி, தென்காசி, விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாத தவெக

கன்னியாகுமரி, தென்காசி, விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாத தவெக

0

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக பல மாவட்​டங்​களில் அமோக வெற்​றி​பெற்​றாலும் கன்​னி​யாகுமரி, தென்​காசி, விழுப்​புரம் உட்பட 8 மாவட்​டங்​களில் ஓர் இடத்​தில்​கூட அக்​கட்சி வெற்றி பெற​வில்லை என்​பது வியப்​பாக இருக்​கிறது.

நடந்து முடிந்​துள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய் தலை​மையி​லான தவெக தனித்​துப் போட்​டி​யிட்டு 108 இடங்​களை வென்​றுள்​ளது. திமுக​வின் கோட்டை எனக் கருதப்​படும் சென்னை மாவட்​டத்​தில் உள்ள 16 தொகு​தி​களில் 14 தொகு​தி​களைக் கைப்​பற்​றி​யிருக்​கிறது.

அதில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர் தொகு​தி​யும் அடங்​கும். மேலும், சென்​னையைச் சுற்​றி​யுள்ள மாவட்​டங்​களான காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் மொத்​த​முள்ள 4 தொகு​தி​களி​லும் திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள 10-ல் 9 தொகு​தி​களி​லும், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் 7-ல் 5 தொகு​தி​களி​லும் வெற்​றி​பெற்​றிருக்​கிறது.

அது​மட்​டுமின்​றி, திமுக​வுக்கு பெரிதும் கைகொடுக்​கும் வடக்கு மண்​டலம், மத்​திய மண்​டலம், தென்​மண்​டலம் அதே​போல், அதி​முக மிக​வும் வலிமை​யாக இருக்​கக்​கூடிய மேற்கு மண்​டலத்​தி​லும் தவெக அதிக இடங்​களில் வென்​றுள்​ளது.

விசில் புரட்​சி​யால் தமிழகம் முழு​வதும் பரவலாக திமுக, அதி​முக கட்​சிகளை வீழ்த்​தி​னாலும் கன்​னி​யாகுமரி, தென்​காசி, அரியலூர், மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், நீல​கிரி, திரு​வாரூர், விழுப்​புரம் ஆகிய 8 மாவட்​டங்​களில் தவெக​வால் ஒரு தொகு​தி​யைக்​கூட கைப்​பற்ற முடிய​வில்லை என்​பது வியப்​பாக இருக்​கிறது.

இந்த பகு​தி​களுக்கு அவர் பிரச்​சா​ரம் செல்​லாமலும் இல்​லை. இத்​தனைக்​கும் மேலாக தவெக முதல் மாநாடு நடத்​தப்​பட்ட விழுப்​புரம் மாவட்​டம் விக்​கிர​வாண்டி தொகு​தி​யில் கூட வெல்ல இயல​வில்​லை.

திமுக, அதி​முக இரு கட்​சிகளும் இந்த மாவட்​டங்​களில் பலமான வாக்கு வங்​கி​யுடன் இருப்​பதே இதற்​குக் காரணம். தமிழகத்​தின் மற்ற மாவட்​டங்​களைப் போல இந்த மாவட்​டங்​களி​லும் முதல்​முறை வாக்​காளர்​களாகிய இளம் வாக்​காளர்​களும் கணிச​மாகவே உள்​ளனர்.

இம்​மாவட்​டங்​களை கல்​வி​யில் முன்​னேறிய மாவட்​டங்​கள், கல்​வி​யில் பின்​தங்​கிய மாவட்​டங்​கள் என்று வகைப்​படுத்​தி​விட​வும் முடி​யாது. காரணம் கன்​னி​யாகுமரி, தென்​காசி மாவட்​டங்​கள் மட்​டுமின்றி விழுப்​புரம், அரியலூர் மாவட்​டங்​களும் அதில் இடம்​பெற்​றுள்​ளன.

இந்த 8 மாவட்​டங்​களில் தலா ஒன்​றிரண்டு தொகு​தி​களில் வென்​றிருந்​தால்​கூட எந்த கட்​சிகளின் தயவை​யும் எதிர்​பா​ராமல் தனிப்​பெரும்​பான்​மை​யுடன் தவெக ஆட்சி அமைத்​திருக்​கும்​ என்​று அரசி​யல்​ பார்​வை​யாளர்​கள்​ கருதுகிறார்​கள்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version