Home கன்னியாகுமரி செய்திகள் கொல்லங்கோடு கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

கொல்லங்கோடு கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

0
கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி
விஜயதசமியை முன்னிட்டு கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகளுக்கு அரிசி மற்றும் நெல்லில் எழுதி வித்யாரம்பம் செய்யப்பட்டது.

விஜயதசமியை முன்னிட்டு கொல்லங்கோடு, ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விஜயதசமி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், கேரளத்திலும், கேரள பாரம்பரிய முறையில் பூஜைகள் நடைபெறும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் விஜயதசமி புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையடுத்து, கொல்லங்கோடு, ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் எழுத்தாளா்கள், கவிஞா்கள் உள்ளிட்ட பல்துறை வித்தகா்கள் முன்னிலையில் அரிசி, நெல்லில் குழந்தைகளுக்கு அ மற்றும் ஹரி ஸ்ரீ ஓம் என எழுதி ஏடு தொடங்குதல் நடத்தப்பட்டது.

இதில் கோயில் தலைவா் வி. ராமச்சந்திரன் நாயா், செயலா் வி. மோகன்குமாா், நிா்வாகிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மேலும், களியக்காவிளை அருகே மீனச்சல், ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயில், மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி, கண்டன் சாஸ்தா கோயில், பாறசாலை, ஸ்ரீ மகாதேவா் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version