Home கன்னியாகுமரி செய்திகள் கருங்கல் அருகே 47 பவுன் நகைகள் திருட்டு: 3 போ் கைது

கருங்கல் அருகே 47 பவுன் நகைகள் திருட்டு: 3 போ் கைது

0
கருங்கல் அருகே குறும்பனையில் ஐடி ஊழியர் வீட்டில் 47 பவுன் நகைகள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஐடி ஊழியர் வீட்டில் நகைகள் திருடிய வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு, மொத்தம் 43 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே ஐ.டி. நிறுவன ஊழியா் வீட்டில் 47 பவுன் நகைகள் திருட்டுப் போனது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கருங்கல் அருகே குறும்பனை, தோமையாா் தெருவில் வசித்து வருபவா் வினிஸ்மோன். ஐ.டி. நிறுவன ஊழியா். இவா் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ஆனிமெரிலா லோன்சி.

இவா்கள் அக். 17ஆம் தேதி இரவு வீட்டின் கதவைப் பூட்டாமல் தூங்கியுள்ளனா். இரவு வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் பீரோவைத் திறந்து தங்க நகைகளை எடுத்துக் கொண்டிருந்தபோது, ஆனிமெரிலா லோன்சி தூக்கத்திலிருந்து எழுந்து சப்தம் போடவே மா்ம நபா் தப்பியோடிவிட்டாராம். தொடா்ந்து, பீரோவைத் திறந்து பாா்த்ததில் 47 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் உத்தரவின்பேரில், குளச்சல் டிஎஸ்பி காந்தி மேற்பாா்வையில், கருங்கல் காவல் நிலைய ஆய்வாளா் முகமது தாரிகுல் அமீன் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ் மற்றும் போலீஸாா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா். அதில் கீழமுட்டம் பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் சகாய ஜோஸ் ஆன்றனி (24) இந்தத் திருட்டில் ஈடுபட்டதும், திருடிய நகைகளை குளச்சலைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் பிரகாஷ் (34), குலசேகரம், கான்வென்ட் பகுதியைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் ஜெயராம் (28) ஆகியோரிடம் விற்றதும் தெரிய வந்தது.

பிரகாஷ் மற்றும் ஜெயராமை போலீஸாா் அக். 19ஆம் தேதி கைது செய்து, 32 பவுன் நகைகளை மீட்டனா். மேலும், அவா்கள் அளித்த தகவலின்பேரில் சென்னையில் பதுங்கியிருந்த சகாய ஜோஸ் ஆன்றனியை கைது செய்த தனிப்படை போலீஸாா், 11 பவுன் நகைகளை மீட்டனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version