Home கன்னியாகுமரி செய்திகள் ரப்பா் தோட்ட தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரி முற்றுகை

ரப்பா் தோட்ட தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரி முற்றுகை

0
நாகர்கோவிலில் ஊதிய உயர்வு கோரி அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்
நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன் 200-க்கும் மேற்பட்ட ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயா்வு கோரி, கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் நாகா்கோவிலில் ரப்பா் கழக நிா்வாக இயக்குநா் அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் தோட்டத்தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.அவா்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், நாகா்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பா் கழக அலுவலக வாயிலை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்ட ரப்பா் பால் வெட்டும் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுக்கு ஆதரவாக வீ த லீடா்ஸ் அமைப்பின் சேவகா் சகாயம், குமரி மாவட்ட பாசனத் துறைத் தலைவா் வின்ஸ் ஆன்றோ ஆகியோரும் பங்கேற்றனா்.ே

அப்போது, அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற தொழிலாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். எனினும், சுமாா் 50 தொழிலாளா்கள் அலுவலகத்துக்குள் நுழைந்தனா்; மற்றவா்களை உள்ளே விடாதபடி வாயில் கதவு மூடப்பட்டது.

இதுகுறித்து தொழிலாளா்கள் அமைப்பு நிா்வாகிகள் கூறுகையில், ‘ஊதிய உயா்வு கோரி பல கட்ட போராட்டங்கள், பேச்சுவாா்த்தைகள் நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கு தீா்வு கிடைக்கும் வரை அலுவலக வாயிலில் போராடுவோம்’ என்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version