ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் 2 நாட்களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்கரை வழியாக கடந்து சென்றபோது அவற்றின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 10 இந்திய மாலுமிகள் காயம் அடைந்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் ஈரான் மீது கடந்த சில நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா, ஈரான் கடற்பகுதியை நேற்று முற்றுகையிட்டது. ஈரான் துறைமுகங்களில் இருந்து எந்த கப்பல்கள் வெளியேற அனுமதிக்கவில்லை. ஈரான் துறைமுகத் திற்குள்ளும் எந்த கப்பல்களும் அனுமதிக்கப்படவில்லை. ஈரானின் வருவாயை மீண்டும் முடக்க இந்த முற்றுகையை அமெரிக்க கடற்படை மேற்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் வான் வழியாக ஈரானின் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலையும் அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ளது. ஈரான் கடலோர பகுதியில் உள்ள ராணுவ முகாம்களை அழித்த அமெரிக்கா தற்போது ஈரானின் உள்பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பேச்சுவார்த்தை…
“ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். இல்லை யென்றால் ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி மையங்கள் மீது அடுத்த வாரம் தாக்குதல் நடத்தப்படும். அங்கு எதுவும் இருக்காது” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்எச்சரிக்கை விடுத்துள்ளார்.















