தவெக தோற்ற பிறகு கட்சியே காலாவதி ஆகிவிடும்: திமுக வர்த்தக அணி செயலர் கருத்து

0
26

தவெக தோற்ற பிறகு கட்​சியே காலா​வ​தி​யாகி​விடும் என்று திமுக வர்த்​தகர் அணிச் செய​லா​ளர் காசி​முத்​து​மாணிக்​கம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: “மது​ராந்​தகம் தொகு​தி​யில் திமுக வெற்றி பெற்​றால் கட்​சிப் பதவி​யில் இருந்து வில​குகிறேன்” என்​கிறார் அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா. தவெக தோற்ற பிறகு கட்​சியே காலா​வதி ஆகி​விடும்.

அப்​போது ராஜி​னாமா செய்​தால் என்ன. செய்​யா​விட்​டால் என்ன. தேர்​தலில் தவெக தோற்​றால், திமுக​வில் இருந்து விசிக​வுக்​கு, விசிக​வில் இருந்து தவெக​வுக்கு சென்​றது​போல, தவெக​வில் இருந்து விலகி வேறு கட்​சிக்​குச் செல்​வார்.

தாராபுரத்​தில் தவெக ரூ.1,000 கொடுக்க ஆரம்​பித்​ததே, தவெக​வின் தோல்​வி​யின் தொடக்​கம். ஆளுங்​கட்​சிக்கு சத்​ய​பா​மா, மரகதம் குமர​வேல் வந்​ததே தொகு​திக்கு நன்மை செய்​யத்​தான் என்​கிறார்​கள்.

ஆளும் கட்​சி​யில் சேர்ந்​தால்​தான் தொகு​திக்கு நன்மை செய்ய முடி​யும் என்​றால் தவெக கூட்​ட​ணிக் கட்​சிகளான முஸ்​லிம்லீக், மதி​முக, காங்​கிரஸ் கட்​சி​யினர் தங்​கள் எம்​.பி. பதவியை ராஜி​னாமா செய்து பின்​னர் மத்​தி​யில் ஆளும் பாஜக​வில் சேர்ந்து மீண்​டும் தேர்​தலை சந்​திப்​பார்​களா.

சட்​டப்​பேரவை வரலாற்​றில் வெற்றி பெற்ற 13 நாளில் ராஜி​னாமா செய்​தது அதி​முக​வினர்​தான். மது​ராந்​தகம், தா​ராபுரத்​தில் தி​முக வெல்​வது உறு​தி. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here