பளுகல் கண்ணுமாமூடு பகுதியைச் சேர்ந்த பிளம்பர் லிபின் ராஜ் (27), பாறசாலை கொற்றாமம் பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது, இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
            













