திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கியது: முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் காணிக்கை

0
20

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்​கியது.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் இந்த ஆண்டு 2 பிரம்​மோற்சவ விழாக்​கள் நடை​பெற உள்​ளன. இதில் முதலா​வ​தாக வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகல​மாக தொடங்​கியது. பிரம்மோற்சவத்தை முன்​னிட்டு நேற்று மூல​வருக்கு 11 கஜம் கத்வால் இரட்டை வேட்டி சாத்​தப்​பட்​டது.சுவாமிக்கு வைர அலங்காரம் செய்​யப்​பட்​டிருந்​தது.

நேற்று மாலை, உற்​சவர்​களான ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் மலையப்​பர் தங்க பல்​லக்​கில் கொடிக்​கம்​பம் வரை கொண்டு வரப்​பட்​டனர். அங்கு இவர்​களின் முன்​னிலை​யில், வேதங்​கள் முழங்க, மங்கள இசை​யுடன் கருடன் சின்​னம் பொறித்த கொடி, தங்​கக் கொடிமரத்​தில் ஆகம சாஸ்​திரங்​களின்​படி ஏற்​றப்​பட்​டது. நேற்​றிரவு பெரிய சேஷ வாக​னத்​தில் உற்​சவ​ரான மலை​யப்​பர் 4 மாட வீதி​களில் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தார்.

பிரம்​மோற்​சவத்​தின் முதல் நாளான நேற்​றிரவு ஆந்​திர அரசு தரப்பில் அம்​மாநில முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தம்​பதி சமேத​ராய் பட்டு வஸ்​திரத்தை சுவாமிக்கு காணிக்​கை​யாக வழங்கினார். முன்​ன​தாக அவர், திரு​மலை​யில் கோயிலுக்கு எதிரே உள்ள பேடி ஆஞ்​சநேயர் கோயி​லில் தரிசனம் செய்​தார்.

அங்​கிருந்து பட்டு வஸ்​திரங்​களை தலை​யில் சுமந்​த​படி கோயிலுக்கு சென்று சமர்ப்​பித்​தார். அதன் பின்​னர், சுவாமி தரிசனம் செய்த அவருக்​கு, ரங்​க​நாயக மண்​டபத்​தில் தீர்த்த, பிரசாதங்​கள் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டது. பின்​னர், சந்​திர​பாபு நாயுடு, 2027-ம் ஆண்​டின் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் புகழ்​பெற்ற காலண்​டர்​கள் மற்​றும் டைரி​களை வெளி​யிட்​டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here