திங்கள்நகரில் இருந்து தலக்குளம் செல்லும் சாலையில் காட்டுவிளை என்ற இடத்தில் இன்று காலை திடீர் என்று சாலை ஓரம் நின்று கொண்டு இருந்த தென்னை மரம் சாலையில் குறுக்கே சாய்ந்து விழுந்தது. மின்கம்பி மீது மரம் விழுந்ததால் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. உடனடி அப்பகுதியினர் இரணியல் மின்சார வாரியம், காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு மீட்பு துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர். திங்கள் நகர் தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் ஜாண் வின்ஸ் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்து தென்னை மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.