குரூப்-1 தேர்வில் சான்றிதழ் பதிவேற்ற நவ.2 வரை அவகாசம்

0
501

குரூப்-1 தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை தேர்வர்கள் நவம்பர் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-1 தேர்வில் சில தேர்வர்கள், தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாமல்இருப்பதும், சிலவற்றை முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் விட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அவர்கள் நவம்பர் 2-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து அவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here