தக்கலை பகுதியை சேர்ந்தவர் பில்மோர் ராபர்ட் ( 45). திமுக குமரி மேற்கு மாவட்ட நிர்வாகி. இவரது மனைவி புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சாக உள்ளார். இவருக்கு பணியிட மாறுதல் வாங்கி தருவதாக கூறி முளகுமூடு பகுதியை சேர்ந்த ஆண்டனி (50), கொடைக்கானல் சகாய ராஜா ஆகியோர் ரூ 5 லட்சத்தை வங்கி மேலும் பெற்றுள்ளனர். ஆனால் பணியிட மாறுதல் வாங்கி கொடுக்கவில்லை. இது குறித்து பில்மோர் ராபர்ட் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆண்டனி மற்றும் சகாயராஜ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
