Home உலக செய்திகள் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன் உட்பட 3 பேர் விண்வெளி பயணம்

இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன் உட்பட 3 பேர் விண்வெளி பயணம்

0

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு ரஷ்யா நேற்று வெற்​றிகர​மாக அனுப்​பியது.

அமெரிக்​கா, ரஷ்​யா, ஐரோப்​பிய ஒன்​றி​யம், ஜப்​பான், கனடா ஆகியவை இணைந்து சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை அமைத்​துள்​ளன. இந்த விண்​வெளி நிலை​யத்​துக்கு அமெரிக்​கா​வின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் டிராகன், ரஷ்​யா​வின் சோயூஸ் விண்​கலங்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

தற்​போது சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் 7 விண்​வெளி வீரர்கள் தங்​கி​யிருந்து ஆய்வு செய்​கின்​றனர். பொது​வாக 6 மாதங்களுக்கு ஒரு​முறை அவர்​கள் மாற்​றப்​படு​வது வழக்​கம். இதன்​படி அமெரிக்​கா​வின் நாசா விண்​வெளி மையத்தை சேர்ந்த அனில் மேனன், ரஷ்ய விண்​வெளி வீரர்​கள் பியோட்​டர் துப்​ரோவ், அன்னா கிகினா ஆகியோர் நேற்று இரவு சோயூஸ் எம்​எஸ்​-29 விண்​கலம் மூலம் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு புறப்பட்டனர்.

கஜகஸ்​தான் நாட்டில் உள்ள பைக்​கானூரில் உள்ள ஏவுதளத்​தில் இருந்து இவர்​களின் விண்​கலம் நேற்று இரவு 7.47 மணிக்கு (இந்திய நேரப்​படி இரவு 8.17 மணி) புறப்​பட்​டது. இந்​திய வம்​சாவளியை சேர்ந்த அனில் மேனனுக்கு இது முதல் விண்​வெளிப்பயண​மாகும். விண்​கலம் புறப்​படு​வதற்கு முன் அனில் மேனன் எக்ஸ் தளத்​தில் தனது மகிழ்ச்​சியை பகிர்ந்து கொண்​டார்.

அவர் தனது பதி​வில், “கஜகஸ்​தானில் இருந்து சோயூஸ் எம்​எஸ்​-29 விண்​கலம் மூலம் விண்​வெளிக்​குச் செல்​வ​தி​லும், நாசா மற்​றும் எக்​ஸ்​பெடிஷன் 74/75-க்கு ஆதர​வாக 8 மாத காலப் பணியை தொடங்​கு​வ​தி​லும் பெரு​மகிழ்ச்சி அடைகிறேன். நாசா, நண்பர்கள், குடும்​பத்​தினர் மற்​றும் அன்​பானவர்​களுக்கு எனது நன்​றி. நாளை விடியப்​போகும் நாளுக்​காக காத்​திருக்​கிறேன்​” என்று குறிப்​பிட்​டுள்​ளார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version