Home மாநில செய்திகள் அரசு கட்டிடங்களின் தரத்தை குறிக்க 3 வண்ணங்களில் ஸ்டிக்கர் குறியீடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

அரசு கட்டிடங்களின் தரத்தை குறிக்க 3 வண்ணங்களில் ஸ்டிக்கர் குறியீடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

0

அரசு கட்​டிடங்​கள் எந்த தரத்​தில் உள்ளன என்​பதை பொது​மக்​கள் தெரிந்து கொள்ள 3 வண்​ணங்​களில் ஸ்டிக்​கர் குறி​யீடு​கள் அறி​முகம் செய்​யப்​படும் என அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா தெரி​வித்​தார்.

நெடுஞ்​சாலைத்​துறை மற்​றும் பொதுப்​பணித்​துறை பொறி​யாளர்​களு​ட​னான ஆய்​வுக் கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா கலந்​து​கொண்டு துறை​யின் புதிய திட்​டங்​கள் மற்​றும் சீரமைப்​புப் பணி​கள் குறித்து அதி​காரி​களுக்கு முக்​கிய ஆலோசனை​களை வழங்​கி​னார்.

கூட்​டத்​தில் அமைச்​சர் பேசி​ய​தாவது: தற்​போதைய தலை​மைச் செயல​கத்​தில் செய்தி சேகரிக்க வரும் பத்​திரி​கை​யாளர்​களோ அல்​லது தங்​களின் தேவை​களுக்​காக வரும் பொது​மக்​களோ அமர்ந்து பேசுவதற்​குக்​கூடப் போதிய இடவசதி இல்​லை.

கர்​நாட​கா, தெலங்​கானா போன்ற அண்டை மாநிலங்​கள் தங்​களது தலை​மைச் செயல​கங்​களுக்கு நவீன கட்​டிடக் கட்​டமைப்​பு​களை உரு​வாக்​கி​விட்டன.

அதே​போன்று தமிழகத்​தி​லும் புதிய தலை​மைச் செயல​கக் கட்​டமைப்​புக்​கான பணி துரித​மாக முன்​னெடுக்​கப்​பட்டு வரு​கிறது.

அடுத்த 50 ஆண்​டு​காலத் தேவையை மனதில் கொண்டே இத்​திட்​டம் வடிவ​மைக்​கப்​படு​கிறது. பொதுப்​பணித் துறை​யின் கீழ் உள்ள அனைத்​துக் கட்​டிடங்​கள் குறித்த ஒருங்​கிணைந்த தரவு​கள் தற்​போது முழு​மை​யாக ஆவணப்​படுத்​தப்​பட​வில்​லை.

எனவே, தனி​யார் நிறு​வனங்​களைப் போன்று ஒவ்​வொரு விவர​மும் முறைப்​படுத்​தப்​பட்டு ஆன்​லைனில் பொது​மக்​கள் பார்​வைக்​குக் கொண்​டு​வரப்பட உள்​ளது. மேலும், அரசு கட்​டிடங்​களின் உறு​தித்​தன்மை ஆய்வு செய்​யப்​பட்டு அவற்​றின் தரம் 3 வண்ண ஸ்டிக்​கர்​கள் மூலம் வெளிப்​படை​யாகக் குறிக்​கப்​படும்.

நல்ல நிலை​யில் உள்ள கட்​டிடங்​களுக்கு பச்சை வண்​ணம், பழுது​பார்க்​கப்பட வேண்​டிய கட்​டிடங்​களுக்கு மஞ்​சள் வண்​ணம், மிக​வும் மோச​மான மற்​றும் அபாயகர​மான நிலை​யில் உள்ள கட்​டிடங்​களுக்கு சிவப்பு வண்​ணம் என குறிக்​கப்​படும். இந்த ஆய்​வுப் பணி​கள் முதற்​கட்​ட​மாகப் பள்​ளி​களி​லும், அடுத்​த​தாகக் கல்​லூரி​கள் மற்​றும் அரசு மருத்​து​வ​மனை​களி​லும் விரிவுபடுத்​தப்​படும்.

கட்​டு​மானப் பணி​களுக்​காக இயற்கை மணல் அள்​ளுவதற்​குத் தடை விதிக்​கப்​பட்​டுள்ள சூழலில், மாற்​றுப் பொருளாகப் பயன்​படுத்​தப்​படும் எம்​ ​சாண்ட் தரத்தை உறுதி செய்​வது மிக​வும் அவசி​யம்.

கட்​டு​மானப் பணி​களுக்​குப் பயன்​படுத்​தப்​படும் எம்​-​சாண்ட் தரம் குறித்து பொதுப்பணித்​துறை பொறி​யாளர்​கள் உரிய ஆய்வு மேற்​கொண்டு அதி

​காரப்​பூர்வ சான்​றிதழ் வழங்க வேண்​டும். இதில் ஏதேனும் போலித்​தன்மை அல்​லது முறை​கேடு​கள் கண்​டறியப்​பட்​டால், கனிம வளத்​துறை மூலம் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version