Home மாநில செய்திகள் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும்: வங்கி ஊழியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும்: வங்கி ஊழியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

0

தொடர் வேலைநிறுத்​த போராட்​ட முடிவை வங்கி ஊழியர்​கள் கைவிட வேண்டும் என மத்​திய அரசு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

பொதுத்​துறை வங்கி தொழிற்​சங்​கங்​களின் ஒருங்​கிணைந்த அமைப்பு மற்​றும் பிராந்​திய கிராமப்​புற வங்​கி​களின் தொழிற்​சங்​கங்​கள் இணைந்​து, இரண்டு முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொடர் வேலைநிறுத்​தப் போராட்​டங்​களுக்கு அழைப்பு விடுத்​திருந்​தன.

வாரத்​தில் 5 நாட்​கள் மட்​டுமே வங்​கிச் செயல்​பாடு​களை மேற்​கொள்​ளுதல், செயல்​திறன் சார்ந்த ஊக்​கத்​தொகை (பிஎல்ஐ) திட்​டத்தை திரும்​பப் பெறு​தல் ஆகிய கோரிக்​கைகளை சங்​கங்​கள் முன்​வைக்​கின்​றன.

விரி​வான ஆலோ​சனைக்​குப் பிறகு, பிஎல்ஐ திட்​டத்தை தற்​காலிக​மாக நிறுத்​திவைக்க மத்​திய அரசு முடிவு செய்​தது. இதைத்​தொடர்ந்​து, நிலு​வை​யில் உள்ள பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காண அரசு பல கட்ட சமரசப் பேச்​சு​வார்த்​தைகளை நடத்​தி​யது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version