Home மாநில செய்திகள் ஜெம் வீரமணி வழக்கில் காவல் அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை? – இரண்டு பெண் அதிகாரிகள்...

ஜெம் வீரமணி வழக்கில் காவல் அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை? – இரண்டு பெண் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

0

ஜெம் வீரமணி வழக்​கில் சிக்​கிய காவல் துறை​யினர் மீது விரை​வில் சஸ்​பெண்ட் நடவடிக்கை பாய உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும் 2 பெண் காவல் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் பலரை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக பிரபல கிரானைட் தொழில் அதிபர் ஜெம் வீரமணி (84) மீது சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் 8 வழக்​கு​களைப் பதிவு செய்​து புழல் சிறை​யில் அடைத்தனர்.

அவரது உதவி​யாளர் சாந்​தி, கணவர் மகேந்​திர சிம்​மன், வீரமணி நிறு​வனத்​தில் நீண்ட காலம் பணி செய்து வந்த கணேசன், பாலியல் வன்​கொடுமை குற்​றத்​துக்​குச் சிறுமிகளை அழைத்து வந்து உடந்​தை​யாக இருந்த வீரமணி​யின் கார் ஓட்​டுநர்​கள் லாசர், பார்த்​திபன், பாபு ஆகியோ​ரும் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், சிறுமிகள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்கில், சிறப்​புப் புல​னாய்​வுக் குழு போலீ​ஸார் கடந்த 11-ம் தேதி சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள போக்சோ வழக்​கு​களுக்​கான சிறப்பு நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​தனர்.

720 பக்​கங்​கள் கொண்ட அந்த குற்​றப் பத்​திரி​கை​யில் வீரமணி, அவரது கார் ஓட்​டுநர்​கள் பார்த்​திபன், பாபு ஆகியோர் பெயர்​கள் இடம் பெற்​றிருந்​தன இந்​நிலை​யில், சிறுமிகள் தொடர்​பான புகார் அளிக்​கப்​பட்ட போது உரிய விசா​ரணை நடத்​தாமல் வழக்கை தாமதப்​படுத்​திய குற்​றச்​சாட்​டில் சென்னை முன்​னாள் காவல் ஆணை​யர் அருண் உட்பட 7 காவல் துறை​யினரும் வழக்​கில் சேர்க்​கப்​பட்​டனர்.

இவர்​கள் ஏற்​கெனவே காத்​திருப்​போர் பட்​டியலில் வைக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அடுத்​த கட்ட நடவடிக்​கை​யாக சஸ்​பென்ட் நடவடிக்கை பாய உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும் வீரமணி வழக்​கில் விரை​வில் 2-ம் கட்ட குற்​றப்​பத்​திரி​கை​யும் தாக்​கல் செய்​யப்பட உள்​ளது.

இதற்​கான பணி​யில் போலீஸ் அதி​காரி​கள் ஈடு​பட்​டுள்​ளனர். அதில் காவல் துறை​யினர், பணம் பறித்​தவர்​களின் பெயர்​கள் இடம்​பெற உள்​ள​தாக பரபரப்​பு தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

இந்​நிலை​யில், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றத் தடுப்பு பிரிவு துணை ஆணை​யர் கீதாஞ்​சலி, ஆவடி காவல் ஆணை​யரக தலைமையிடத்து துணை ஆணை​யர் வனிதா ஆகியோரை காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்றி உள்​துறை செயலர் ஏ.கார்த்​திக் நேற்று உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version