Home மாநில செய்திகள் தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை

0

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில், அன்பில் மகேஸின் நண்பர் வாளாடி கார்த்திக்கிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கடந்த திமுக ஆட்சியின்போது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, டிடிசிபி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி வழக்கில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் தலைவராக இருந்த திமுக பிரமுகரான பி.டி.அரசகுமார், கடந்த ஜூன் 27-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு அவர் மீதுஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, அன்பில் மகேஸின் முன்னாள் சிறப்பு உதவியாளராக இருந்ததாகக் கூறப்படும் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் அருள் முருகனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அன்பில் மகேஸின் உதவியாளராக இருந்த வரும், நண்பருமான திருச்சி மாவட்டம், லால்குடி அருகிலுள்ள வாளாடி பகுதியைச் சேர்ந்த

கார்த்திக்கை நேற்று காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரவழைத்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர்அளித்த தகவல்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version