Home தேசிய செய்திகள் ரூ.10,000 சம்​பளம் வழங்காததால் ஊழியர் ஆத்திரம்: சூரத்தில் ஜவுளி கடைக்கு வைத்த தீயால் ரூ.24 கோடி...

ரூ.10,000 சம்​பளம் வழங்காததால் ஊழியர் ஆத்திரம்: சூரத்தில் ஜவுளி கடைக்கு வைத்த தீயால் ரூ.24 கோடி சேதம்

0

ரூ.10,000 நிலுவை சம்​பளத்​தை வழங்​காத ஆத்​திரத்​தில்​, தனது ​முதலா​ளிக்​கு ​பாடம்​ புகட்​ட நினைத்​த கணக்​காளர்​ ஒரு​வர்​ செய்​த செயல்​ ஒட்​டுமொத்​த ஜவுளிச்​ சந்​தைக்​கே ரூ.24 கோடி இழப்​பை ஏற்​படு​த்​தி உள்​ளது.

இச்​சம்​பவம்​ குஜ​ராத்​தின்​ சூரத்​தில்​ நடந்​துள்​ளது. குஜ​ராத்​ ​மாநிலம், சூரத்​ நகரில்​ உள்​ள ஷி​யாம்​ சங்​கினி ஜவுளி ​மார்க்கெட்டில்​ கடந்​த 8-ம்​ தே​தி தீ ​விபத்​து ஏற்​பட்​டது. இ​தில்​ 14 கடைகளில்​ ரூ.24 கோடி ம​திப்​பிலான துணி​கள்​ தீ​யில்​ எரிந்​து ​நாசமானது. இந்​த ​விபத்​து தொடர்​பாக ​சா​ரோலி பகு​தி ​போலீ​ஸார்​ வழக்​குப்​ ப​திவு செய்​து, ‘​விஸ்​வாஸ்​ பு​ராஜெக்​ட்​ பேஸ்​-2’ ​திட்​டத்​தின்​ கீழ்​ பொருத்​தப்​பட்​டிருந்​த பல கண்​காணிப்​பு கேம​ராக்​களின்​ ​காட்சிகளை ஆய்​வு செய்​தனர்​.

இ​தில்​, ஒரு கடை​யின்​ வெளியே வைக்​கப்​பட்​டிருந்​த துணிப்​ ​பார்​சல்​களுக்​கு ​முகத்​தை துணி​யால்​ மூடிய ஒரு​வர்​ தீ வைக்​கும்​ ​காட்​சிகள்​ ப​தி​வாகி​யிருந்​தன. முகத்​தை மூடி தீ வைத்​தது டிண்​டோலி பகு​தி​யில்​ உள்​ள பிலிபத்​ரா ரெசிடென்​சி​யைச்​ சேர்​ந்​த ​வினோத்​ பண்​டிட்​ ​சாவ்​லே என ​போலீ​ஸார்​ அடை​யாளம்​ கண்​டனர்​. அவரை கை​து செய்​தனர்​.

பின்​னர்​ அவரிடம்​ நடத்​தப்​பட்​ட ​வி​சா​ரணை குறித்​து ​போலீ​ஸார்​ கூறிய​தாவது: வினோத்​ ​சாவ்​லே கடந்​த ஏப்​ரல்​ ​முதல்​ மூன்​று ​மாதங்​கள்​ ஒரு ஜவுளி கடை​யி்ல்​ கணக்​காள​ராக பணி​யாற்​றி​யுள்​ளார்​. கணக்​கு பணி​களைச்​ சரி​யாக கை​யாள ​முடி​யாத​தால்​ ஜூன்​ ​மாதம்​ அவர்​ வேலையை ​விட்​டு நீக்கப்பட்டுள்​ளார்​.

மேலும்​, தனது ​முதலாளி தனக்​கு ரூ.10,000 சம்​பள ​பாக்​கி தர​மால்​ இழுத்​தடித்​த​தால்​, ஆத்​திரம்​ அடைந்​த ​சாவ்​லே, கடை உரிமை​யாள​ருக்​கு ​பாடம்​ புகட்​ட ​திட்​ட​மிட்​டுள்​ளார்​. இதற்​காக, ​சாவ்​லே அங்​குள்​ள பெட்​ரோல்​ நிலை​யத்​தில்​ சு​மார்​ ரூ.150-க்​கு ​பாட்​டிலில்​ பெட்​ரோல்​ ​வாங்​கி​க்​ ​கொண்​டு, செப்​. 8-ம்​ தே​தி சந்​தைக்​குள்​ நள்​ளிர​வில்​ நுழைந்​து, அவர்​ குறி​வைத்​த கடைக்​குச்​ சென்​று பை​யில்​ வைத்​திருந்​த பெட்​ரோல்​ நிரப்​பப்​பட்​ட ​பாட்​டிலை எடு​த்​து, கடை​யின்​ வெளியே வைக்​கப்​பட்​டிருந்​த

துணிப்​ பெட்​டிகள்​ மற்​றும்​ ​பார்​சல்​கள்​ மீது ஊற்​றி​யுள்​ளார்​. பின்னர்​, தீக்​குச்​சி​யைப்​ பயன்​படு​த்​தி அவற்​றுக்​கு தீ வைத்​தார்​. தீ வேக​மாகப்​ பர​வி பல கடைகளைச்​ சூழ்​ந்​தது. இந்​த சம்​பவத்​தில்​, ஒட்​டுமொத்​த ஜவுளிச்​ சந்​தைக்​கே ரூ.24 கோடி இழப்​பு ஏற்பட்டுள்ளது. இவ்​​வாறு போலீ​ஸார்​ தெரிவித்​தனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version