Home கன்னியாகுமரி செய்திகள் திருவட்டாறு:   விபத்தில் ஒர்க்ஷாப் தொழிலாளி படுகாயம்

திருவட்டாறு:   விபத்தில் ஒர்க்ஷாப் தொழிலாளி படுகாயம்

0

திருவட்டாறு அருகே புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் ரோஸ் பர்வீன் (56). ஓர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். நேற்று (7-ம் தேதி) காலை ரோஸ் பர்வீன் வழக்கம்போல் வேலைக்குச் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது திருவட்டார் – மாத்தூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த சரக்கு வாகனம் அவரது மோட்டார் சைக்கிளை மோதியது. 

இதில் தூக்கிவீசப்பட்ட ரோஸ் பர்வீனுக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக அவரது மனைவி பெனினாள் அளித்த புகாரின் பேரில் திருவட்டாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version