திருவட்டாறு பகுதியை சேர்ந்த செலின் என்ற மாணவி, சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி கோவையில் ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. இன்ஸ்டாகிராமில் கோவையை சேர்ந்த வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் மாயமான மாணவியை போலீசார் மீட்டு நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
