திருவட்டாறு அருகே உள்ள வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் ஜான் பேபி (37). இவர் ஆட்டோ டிரைவர். நேற்று ஜான் பேபி சாமியார்மடம் பகுதியில் உள்ள சந்தை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு செட்டிச்சார் விளை என்ற இடத்தை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ் (35) என்பவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது சதீஷ் என்பவர் ஜான் பேபியிடம் இருந்து செல்போனை வாங்கி பேசியுள்ளார். பின்னர் செல்போனை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஷும் அவர் நண்பரும் சேர்ந்து சரமாரியாக ஜான் பேபியை தாக்கினர். இதில் காயமடைந்த ஜான் பேபி மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் சதீஷ் உட்பட இரண்டு பேர் மீது திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.