நேற்று இரவு 8.30 மணியளவில் ஆற்றூர் – சிதறால் சாலையில் பைக்கில் சென்ற வெல்டிங் தொழிலாளி ஸ்டாலின் (35) பருத்திவிளை பகுதியில் சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்ததில், எதிரே வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டாலின் உயிரிழந்தார். திருவட்டார் போலீசார் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














