Home கன்னியாகுமரி செய்திகள் திருவட்டார்: பெண்ணுக்கு கொலை மிரட்டல்; ஒருவர் கைது

திருவட்டார்: பெண்ணுக்கு கொலை மிரட்டல்; ஒருவர் கைது

0

திருவட்டாறு அருகே புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் ஜோபிஷா (32). இவரது கணவர் கிளிட்டஸ். அதே பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (40). இவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள் ஆவார்கள். சொத்து தகராறு தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று (மார்ச் 11)ரெதீஷ் ஜோபிஷாவின் வீட்டுச் சுவரை உடைத்து தகராறு செய்து அவருக்கு மிரட்டல் கொடுத்துள்ளார். இது குறித்து ஜோபிஷா திருவட்டாறு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரெதீஷை கைது செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version