திருவட்டார்: சாலைகளை சீரமைக்க கேட்டு மார்க்சிஸ்ட் மறியல்

0
34

திருவட்டார் பகுதியில் ஜல்ஜீவன் அம்ரூத் திட்ட பணிகளுக்காக சாலைகள் உடைக்கப்பட்டு குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று (12-ம் தேதி) திருவட்டார் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பேரூராட்சி செயலாளர், நெடுஞ்சாலை துறை அதிகாரி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மாதத்திற்குள் சாலைகள் செப்பனிடப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here