திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலைச் சுற்றி பரளியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையில் திருப்பாதக்கடவில் நேற்று இரவு அகில இந்திய சன்னியாசிகள் சங்கம் மற்றும் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் புண்ணிய தீர்த்தங்கள் பராமரிப்பு பக்தர்கள் சங்கம் சார்பில் மஹா ஆரத்தி பெருவிழா நடந்தது. ஜீவகாருண்ய சேவைகள் பேரியக்க தலைவர் வக்கீல் சுரேஷ் பிரசாத் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சன்னியாசிகள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.