சுருளகோட்டில் உள்ள தனியார் ரப்பர் பால் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 50 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு தீர்வு காண வலியுறுத்தி, குமரி மாவட்ட சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் திருவட்டார் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், சிஐடியு மாவட்ட தலைவருமான பெல்லார்மின் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.