Home கன்னியாகுமரி செய்திகள் திருவட்டார் ஊராட்சி உதவியாளர் திடீர் மாயம்.. போலீசார் விசாரணை

திருவட்டார் ஊராட்சி உதவியாளர் திடீர் மாயம்.. போலீசார் விசாரணை

0

திருவட்டார் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்தவர் அரிச்சந்திரன் மகன் சுஜின் (29). இவர் திருவட்டார் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சுஜினுக்கு சற்று மன நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி சுஜினை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே சம்பவ தினம் அலுவலகத்திற்கு பணிக்கு சென்ற சுஜின் பின்னர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை அடுத்து சுஜினின் அக்கா அமல சுஜி (31) என்பவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் நேற்று (29-ம் தேதி) புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுஜினை தேடி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version