அரசுப்​ பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்த ‘திறன் ப்ளஸ்’ திட்டம்: அக். 21 முதல் அடிப்படை மதிப்பீட்டுத் தேர்வு

0
26

தமிழகத்​தில் அரசுப்​பள்ளி மாணவர்​களின் கற்​றல் திறனை மேம்​படுத்த ‘திறன் ப்ளஸ்’ திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதற்​கான அடிப்​படை மதிப்​பீட்​டுத் தேர்​வு​கள் அக். 21 முதல் 23-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.

தமிழகத்​தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் மொழிப் பாடம் மற்​றும் கணித திறனை மேம்​படுத்​தும் வித​மாக திறன் இயக்​கம் கடந்​தாண்டு அமல்​படுத்​தப்​பட்​டது.

இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்​த​தால் தற்​போது 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு திறன் ப்ளஸ் திட்டம் விரிவு​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதை செயல்​படுத்​து​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநர் என்​.லதா மற்​றும் தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது:

இந்​தத் திட்​டத்​தின்​கீழ் மொழிப் பாடத்​திறன் மற்​றும் கணிதத் திறனில் குறை​பாடுள்ள மாணவர்​களைக் கண்​டறிந்து அவர்​களுக்கு சிறப்​புப் பயிற்சிகள் வழங்​கப்பட உள்ளன.

10 வினாக்​கள்..

இதற்​காக மாணவர்​களின் கற்​றல் நிலையை அறி​யும் அடிப்​படை மதிப்​பீட்​டுத் தேர்​வு​கள் (Baseline Assessment) அக்​டோபர் 21 முதல் 23-ம்

தேதி வரை நடை​பெறும். இந்த தேர்​வானது 40 நிமிடங்​கள் வரை நடை​பெறும். மொத்​தம் 10 வினாக்​கள் இடம்​பெற்​றிருக்​கும்.

இந்த தேர்​வின் மூலம் எழுத்​துகள், சொற்​களை கண்​டறிவ​தில் சிரமம் உள்​ளவர்​கள், வாசித்​தல் மற்​றும் எழுது​வ​தில் சிரமம் உள்​ளவர்​கள், எண்​களை எழுது​வ​தி​லும், வாய்ப்​பாடு​கள் கூறு​வ​தி​லும் சிரமப்​படு​பவர்​கள், கூட்​டல், கழித்​தல், பெருக்​கல், வகுத்​தல் போன்ற அடிப்​படைச் செயல்​பாடு​களில் பின்​தங்​கிய​வர்​கள் கண்​டறியப்​படு​வார்​கள்.

தேர்​வுக்​கான வினாத்​தாள்​கள் https://exam.tnschools.gov.in என்ற இணை​யதளத்​தில் முன்​கூட்​டியே பதிவேற்​றம் செய்​யப்​படும். தேர்வுக்கு முந்​தைய நாள் பள்​ளி​கள் இதை பதி​விறக்​கம் செய்​து​கொள்ள வேண்​டும்.

தேர்வு முடிந்​தவுடன் வகுப்பு ஆசிரியர்​கள் விடைத்​தாள்​களைத் திருத்தி மதிப்​பெண்​களை அக்​.31-க்​குள் எமிஸ் தளத்​தில் பதிவேற்ற வேண்​டும். அதன்​பின் தேர்​வாகும் மாணவர்​களின் பட்​டியலை ஆசிரியர்​கள் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here