திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த லலிதா (57) என்பவரின் பையில் இருந்த 23,700 ரூபாயை நேற்று 3 பெண்கள் திருடினர். பொதுமக்கள் அவர்களைப் பிடித்து இரணியல் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணாம்மாள் (60), சுப்பம்மாள் (50), கோழியம்மாள் (51) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.














