டி20 கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெலை, ராஜஸ்தான் வீரர் தீக்சனா வீழ்த்தியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 30 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கிளென் மேக்ஸ்வெலை தீக்சனா ஆட்டமிழக்கச் செய்தார். இதுவரை 10 ஆட்டங்களில் தீக்சனாவின் 40 பந்துகளைச் சந்தித்துள்ள கிளென் மேக்ஸ்வெல் 71 ரன்களைக் குவித்துள்ளார். அதே நேரத்தில் அவரது பந்துவீச்சில் 4-வது முறையாக ஆட்டமிழந்துள்ளார் மேக்ஸ்வெல்.