Home தேசிய செய்திகள் நீதித் துறையை மிரட்டி பணிய வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

நீதித் துறையை மிரட்டி பணிய வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

0

உச்ச நீதி​மன்​றத்தை நோக்கி பேரணி நடத்​திய ராகுல் காந்​தி, அகிலேஷ் யாதவ் மற்​றும் இண்​டியா கூட்​டணி கட்சித் தலை​வர்​கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்​டீஸ் பிறப்பித்து உத்​தர​விட்​டுள்​ளது. தேர்தல் ஆணையர்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள், தொண்​டர்களு​டன் உச்ச நீதி​மன்​றம் நோக்கி கடந்த 12-ம் தேதி பேரணியாக சென்​றனர். எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யில் முறை​கேடு நடந்​துள்​ள​தாகவும், வழக்கு தொடுக்​கப் போவதாகவும் கூறி மனு தாக்​கல் செய்​யும் அறைக்​குள் நுழைந்தனர்.

இதற்​குக் கண்​டனம் தெரி​வித்​தும், உச்ச நீதி​மன்ற வளாகத்துக்குள் அரசி​யல் ஆர்ப்​பாட்​டங்​களுக்கு தடை விதிக்​கக் கோரி​யும், நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக் கோரி​யும் வழக்கறிஞர்​கள் மனுதாக்​கல் செய்​தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

மனு​தா​ரர்​கள் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் கவுரவ் பாட்​டி​யா, “உச்ச நீதி​மன்​றத்​தில் அரசி​யல் தலை​வர்​கள் நடத்​திய பேரணி வேதனை அளிக்கிறது. இந்த விவ​காரத்​தில் ராகுல் காந்​தி, அகிலேஷ் யாதவ் உள்​ளிட்ட தலை​வர்​கள் மீது அவம​திப்பு நடவடிக்​கையை எடுக்க வேண்​டும்” என்று கோரிக்கை வைத்​தார்.

அப்​போது, தலைமை நீதிப​தி சூர்யகாந்த், “நீ​தித் துறையை யாராலும் மிரட்டி பணிய வைக்க முடி​யாது. வெளி​யில் நடக்​கும் விவ​காரங்​கள் தெரி​யாத அளவுக்கு நாங்​கள் மாட மாளி​கைக்​குள் வசிக்​க​வில்​லை.

அரசி​யல் தலை​வர்​கள் வெளியே என்ன அறிக்​கைகளை வெளி​யிடு​கிறார்​கள், நீதி​மன்​றத்​தில் என்ன கூறுகிறார்கள் என்​ப​தெல்​லாம் எங்​களுக்கு தெளி​வாக தெரி​யும்.

தற்​போதைய நிலை​யில் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்​குள் போக விரும்​ப​வில்​லை. இது தொடர்​பாக ராகுல், அகிலேஷ் உள்ளிட்ட இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள்​ பதில்​ அளிக்​க வேண்டும்​” என நோட்​டீஸ்​ பிறப்​பித்து உத்தரவிட்டார்.

அதேபோன்று இந்திய தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version