Home தேசிய செய்திகள் பஞ்​சாப்: சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைதானவரின் வீடு இடிப்பு

பஞ்​சாப்: சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைதானவரின் வீடு இடிப்பு

0

 பஞ்சாப்பின் மான்​சாவைச் சேர்ந்த மருந்துக்கடை உரிமை​யாளர் அஸ்​வனி குமார் தடை செய்யப்பட்ட மருந்​துகளை விற்​பது தொடர்​பாக ஏற்​பட்ட தகராறில் சமூக ஆர்வலரான பர்​விந்​தர் சிங்கை அவர் துப்பாக்கியால் சுட்​டுக்கொன்றார்.

இச்சம்​பவத்​துக்​குப் பிறகு தலைமறை​வான அவரைப் பிடிக்க தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. ராஜஸ்​தான் மாநிலம் சலாசரில் பதுங்​கி​யிருந்த அவரை போலீ​ஸார் கைது செய்​தனர். அதன்​பின் அவருடைய வீடு புல்​டோசர்​கள் கொண்டு இடிக்கப்பட்டது. ஏற்​கெனவே, அவரது உறவினர் விபின் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். அஸ்​வனி குமார் மட்​டுமின்​றி, இதில் தொடர்​புடைய அனை​வரும் கைதாக வேண்​டும் என்ற கோரிக்கை வலுத்து வரு​கிறது.

நீதி கிடைக்​கும் வரை​யிலும், முக்​கிய குற்​ற​வாளி​கள் அனை​வரும் கைது செய்​யப்​படும் வரை​யிலும் பர்​விந்​தர் சிங்​கின் உடலுக்கு இறு​திச் சடங்கு செய்​யப் போவ​தில்லை என்று போராட்​டக்​காரர்கள் அறி​வித்​துள்​ளனர். மேலும், இந்​தக் கொலை​யைக் கண்டித்து இன்று (15-ம் தேதி) பஞ்​சாப் முழு​வதும் முழு அடைப்​புப் போ​ராட்​டம் நடத்த அவர்​கள்​ அழைப்​பு விடுத்​துள்​ளனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version