தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார். பல மாதங்கள் ஆகியும் வெளிநாட்டிற்கு அனுப்பாததால், சிவகாந்த் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீஸார் சஜின் ஜோஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














